The Indian Times

சிறுவயதிலேயே Lady Getup போட்டுள்ள தளபதி விஜய்! வைரல் புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

Advertisement

 

இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படம் பிடிக்கப்பட்டது. கொரோனா பரவளின் காரணமாக தற்காலிகமாக தளபதி 65 ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. தளபதி விஜய் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Advertisement

அதிலும் ஜூன் ஜூலை மாதத்தில் என்ற பாடலிலும் , கரிகாலன் பாடலிலும் லேடி கெட்டப்பில் நடித்து ரசிகர்களை ஆச்சரியமூட்டினார். இந்நிலையில் விஜய் இப்போது இல்ல சிறுவயதிலேயே லேடி கெட்டப் போட்டு இருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக அவருடைய சிறுவயது புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர் இப்போது மட்டுமல்ல அப்போதே ஒரு சிறந்த நடிகர் என்பதற்கு இந்த புகைப்படம் உதாரணம்.

 

 

 

 

 

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in