The Indian Times

வாலி திரைப்படத்தின் First Choice இவர் தான்! வந்த வாய்ப்பை இழந்த 44 வயது நடிகை

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கும் நடிகர் தல அஜித். தல அஜித்தின் அடுத்த படம் வலிமை மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். போனி கபூரின் தயாரிப்பில் இயக்குனர் எச். வினோத்தின் அதிரடி த்ரில்லரில் போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஜித். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் மற்றும் DOP நீரவ் ஷா செய்துள்ளார்.

Advertisement

படக்குழு சென்னை மற்றும் ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டி உள்ளிட்ட இடங்களில் முக்கியமான காட்சிகளை சூட் செய்துள்ளது. அதுமட்டுமில்லாது ஸ்பெயின் நாட்டிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா குமகொண்டா, யோகி பாபு, குர்பானி, புகாஜ், அச்சியுத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தல அஜித் நடித்த பல திரைப்படங்கள் மிக பெரிய வசூலை குவித்துள்ளது.

Advertisement

அதில் , இரு வேடங்களில் நடித்து கலக்கிய திரைப்படம் வாலி. நடிகர் மற்றும் எஸ்.ஜே சூர்யா இந்த படத்தை இயக்க தல அஜித் , சிம்ரன் , விவேக் ஆகியோர் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கிய படம் வாலி. இந்த படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார்.

இந்நிலையில் இந்த படத்தை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த படத்தில் சிம்ரன் கதாபத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை மீனா என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த சமயத்தில் மீனாவின் கால் ஷீட் கிடைக்காததால் சிம்ரன் இந்த படத்தில் நடித்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in