The Indian Times

மனம் கவர்ந்த மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகை யார் தெரியுமா?

தற்போதுள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் , தமிழ் படங்களை மட்டும் பார்ப்பதில்லை , மற்ற மொழி படங்களையும் விரும்பி பார்க்கின்றனர். அதிலும் மலையாள படங்கள் தமிழ் ரசிகர்களை ஈற்பதும் உண்டு. அந்த வகையில் மலையாளத்தில் வெளியாகி மலையாள ரசிகர்களை மட்டுமல்லாது தமிழ் படங்களின் ரசிகர்களையும் அதிகளவில் கவர்ந்த திரைப்படம் பிரேமம்.

Advertisement

இந்த படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடித்திருப்பார். கதாநாயகியாக சாய் பல்லவி , மடோனா , அனுபாமா நடித்திருந்தனர். இந்த படத்தில் வரும் கல்லூரி காட்சிகள் அனைத்துமே தற்போதுள்ள இளைஞர்களால் அதிகளவில் கவரப்பட்டது. கருப்பு சட்டை வெள்ளை வேஷ்டி என்ற காம்பினேஷன் ட்ரெண்ட் ஆனது இந்த படத்தி மூலம் தான். அதே போல் இந்த படத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்தார்.

Advertisement

என்னதான் இந்த படத்திற்கு முன்பு ஒரு சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும் , இந்த படத்தில் தான் மக்களால் பெரியளவில் அறியப்பட்டார் சாய்பல்லவி. இவர் இன்று பிரபலமான ஹீரோயினாக இருப்பதற்கு இந்த படமும் ஒரு முக்கிய காரணம்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை அசின் தான் என்ற தகவலை கூறியுள்ளார் பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in