The Indian Times

ஜீவாவிற்கு டப்பிங் செய்துள்ள சிவகார்த்திகேயன்! அதுவும் Superstar ஓட Voice ல.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கே சவால் விடும் அளவிற்கு உச்சத்தை அடைந்துள்ளவர் சிவகார்த்திகேயன். பல இன்னல்களை கடந்து , கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் தொலைக்காட்சி தொகுப்பாளரும் சினிமா நடிகராகலாம், அதுவும் சாதாரண நடிகராக இல்லாமல் மாஸ் ஹீரோவாக உச்சத்தையே அடையலாம் என்பதற்கு சிவகார்த்திகேயன் ஓரு சிறந்த உதாரணம்.

இவரை பாராட்டும் விதமாக தமிழக அரசு அளித்த கலைமாமணி விருது ஒரு சாமானியனை சாதனையாளராக மாற்றியுள்ளது. தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. சிவகார்த்திகேயன் நடிகர் மட்டுமல்ல நல்ல மிமிகிரி ஆர்ட்டிஸ்ட்டும் கூட என்பது அனைவருக்கும் தெரியும்.

Advertisement

இந்நிலையில் ஜீவா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் டப்பிங் செய்துள்ளார் என்ற தகவல் வைரலாகி வருகிறது. ஜீவாவின் நடிப்பில் பல படங்கள் வெற்றி அடைந்துள்ளது. வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் ஜீவா.

ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடித்து வெற்றி அடைந்த திரைப்படம் சிவா மனசுல சக்தி. இந்த திரைப்படத்தில் வரும் ஒரு அடங்காபிடாரி என்ற பாடலில் ஜீவா படையப்பா ரஜினி போல் நடித்திருப்பார். அதில் ரஜினி குரலில் ஜீவாவிற்கு டப்பிங் செய்தது சிவகார்த்திகேயன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in