The Indian Times

சும்மா Mass ஆக திருமணத்தில் என்ட்ரி கொடுத்த கவுண்டமணி: வைரலாகும் வீடியோ

நடிகர் கவுண்டமணி என்றால் தெரியாதவர்கள் எவரும் இல்லை.80 மற்றும் 90 களில் ஹீரோக்களுக்கு இணையாக இவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.இவரும் நடிகர் செந்திலும் இணைந்து படங்களில் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.இவர்கள் இல்லாத படம் அத்தகைய நேரத்தில் வெளியாவதே இல்லை.கரகாட்ட காரன் படத்தில் நடிகர் கவுண்டமணிக்கு செந்திலுக்கு கிடைத்த வரவேற்பினை அடுத்து அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடித்து வந்தனர்.கவுண்டமணி வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பல படங்கள் நடிகர் கவுண்டமணி காமெடிகளினால் வெற்றிபெற்றுள்ளது.நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் கதாநாயகனாக மற்றும் வில்லன் ஆகவும் படங்களில் நடித்து அசத்தியுள்ளார் .தற்போது கவுண்டமணி படங்களில் நடிப்பதில் இருந்து விலகியுள்ளார்.இவரின் காமெடிகள் இன்று வரை மக்களிடம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

Advertisement

நடிகர் கவுண்டமணி நீண்ட நாட்களுக்கு பிறகு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நீண்ட நாட்களுக்கு பிறகு கவுண்டமணியை அவர்கள் பார்ப்பதால் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.இந்த வீடியோவை ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர்.

Embed video credits : galatta

 

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in