The Indian Times

விக்ரம் படத்தின் TRAILER மற்றும் AUDIO LAUNCH வெளியாகும் தேதியை அறிவித்தது படக்குழு

மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தனது கடின உழைப்பினால் இன்று உலகநாயகனை இயக்கும் அளவிற்கு லோகேஷ் கனகராஜ் வளர்ந்துள்ளார்.இவர் இயக்கத்தில் வெளியாகிய கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது உலக நாயகனை வைத்து விக்ரம் படத்தினை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி,பகத் பாசில் மற்றும் நரேன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படம் ஜூன்மாதம் 3ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டை அளித்துள்ளது.

Advertisement

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோவை படக்குழு வருகிற மே மாதம் 15 ஆம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.இதனால் உலகநாயகன் ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் உள்ளனர்.அண்மையில் வெளியாகிய விக்ரம் படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகளுக்கே அப்படி வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தற்போது ட்ரைலருக்கு கேட்கவா வேண்டும்.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in