The Indian Times

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களம் இறங்கும் சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயன் ,மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர்.விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி பின்னர் தொகுப்பாளராகி இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ஆகியுள்ளார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.தற்போது இவரின் படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூலித்து வருவதால் தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயனிடம் கால்ஷீட்டிற்கு வரிசையில் நிற்கின்றனர்.

Advertisement

சிவகார்த்திகேயன் தற்போது நடிப்பில் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராக,பாடல் ஆசிரியராக மற்றும் பாடல் பாடுபவராக என பல திறமைகளை தமிழ் சினிமாவில் வெளிப்படுத்தி வருகிறார்.இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகிய டாக்டர் திரைப்படம் வசூலில் மாபெரும் சாதனையை படைத்தது.அதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் சிபி இயக்கத்தில் டான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.இப்படம் மே 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Advertisement

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் அவர் நிகழ்ச்சியில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகியுள்ளது.மேலும் இதில் டான் படக்குழுவினரும் கலந்துகொண்டுள்ளனர்.இந்த வார நிகழ்ச்சி மிக கலகலப்பாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in