The Indian Times

கொஞ்சம் கூட ராக்கி பாய் மேல பயம் இல்லை…KGF படப்பிடிப்பில் கிரிக்கெட் விளையாடிய ஸ்ரீநிதி ஷெட்டி

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் கேஜிஎப்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.3 ஆண்டுகள் கழித்து தற்போது படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் தான் ஸ்ரீநிதி ஷெட்டி.மாடலிங் துறையில் இருந்து கேஜிஎப் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் இவர்.இவர் அதிர்ஷ்டம் அறிமுகமாகிய முதல் படமே 5 மொழிகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.தற்போது இவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது

Advertisement

அதன்படி,கேஜிஎப் 2 படப்பிடிப்பில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி படக்குழுவினருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பரா விளையாடுறிங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in