The Indian Times

CSK தோற்றால் நான் என்ன பண்றது!!என்ன ஏன் இழுக்கீங்க… நடிகர் நெப்போலியன்

நடிகர் நெப்போலியன் 1991 ஆம் வெளியாகிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர்.தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரம் மற்றும் கதாநாயகனாக நடித்து வந்தார்.கதாநாயகன் மட்டும் இல்லாமல் வில்லனாகவும் நடித்து தமிழ் சினிமாவை அசத்திவந்தார்.இவர் நடித்த மன்னன்,சீவலப்பேரி பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்று 90 களில் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவை வலம் வந்தார்.

Advertisement

தற்போது நெப்போலியன் தமிழ் படங்களில் நடிப்பது குறைவாக உள்ளது.தனது முழுகவனத்தினையும் பிசினஸில் செலுத்தியுள்ளார்.இதனால் தற்போது அவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார்.இவர் நடித்த சீவலப்பேரி பாண்டி படத்தில் இடம்பெற்றுள்ள என் வாழ்க்கை நாடகமா என்ற பாடலை மீம் ஆக மாற்றி வைரலாக்கி வந்தனர்,இந்த மீம் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு வைரலாக மாறியது.

Advertisement

அண்மையில் நடிகர் நெப்போலியன் அளித்த பேட்டி ஒன்றில் இந்த மீம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது,அதற்கு பதில் கூறிய அவர் ஆமாம் நானும் பார்த்தேன்,நல்லா இருக்கு..CSK தோத்துட்டா உடனே அந்த படத்தை எடுத்து மீம் போட்டுறாங்க,அத இந்தியாவில இருந்து எனக்கு அனுப்புவாங்க என சிரித்துக்கொண்டே தெரிவித்துள்ளார்.CSK தோற்றால் நான் என்ன பண்ணுவேன் என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்

Embed credits: indiaglitz 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in