super கண்ணா..fantastic..கடைசி 30 நிமிஷம் அழுகையை control பண்ண முடியல..டான் பார்த்து சிவகார்த்திகேயனுக்கு போன் செய்த ரஜினிகாந்த்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டான்.கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.இதில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார் மேலும் இவர்களுடன் ,எஸ் ஜே சூர்யா,சமுத்திரக்கனி,பாலா,விஜய் மற்றும் ஷிவாங்கி ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க,சிவகார்த்திகேயன் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மாமனார் அருண்பாண்டியன் பிறந்தநாளை கொண்டாடிய அசோக் செல்வன்

super கண்ணா..fantastic..கடைசி 30 நிமிஷம் அழுகையை control பண்ண முடியல..டான் பார்த்து சிவகார்த்திகேயனுக்கு போன் செய்த ரஜினிகாந்த் 1

விளம்பரம்

இப்படம் கடந்த வாரம் மே 13 அன்று திரையரங்கில் வெளியாகியது.டாக்டர் வெற்றிக்கு பிறகு வெளியாகும் சிவகார்த்திகேயன் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன்காத்திருந்த நிலையில்,இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் வந்து இப்படத்தில் கலக்கி உள்ளார்.படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இப்படம் ஒரு வாரத்தில் 100 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.இதனை படக்குழு அண்மையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி புகைப்படங்கள்

super கண்ணா..fantastic..கடைசி 30 நிமிஷம் அழுகையை control பண்ண முடியல..டான் பார்த்து சிவகார்த்திகேயனுக்கு போன் செய்த ரஜினிகாந்த் 2

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் டான் படத்தினை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,சிவகார்த்திகேயனை செல்போனில் தொடர்பு கொண்டு படத்தை பற்றி பாராட்டியுள்ளார்.சூப்பர் சூப்பர் ,fantastic,கடைசி 30 நிமிடங்கள் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை என கூறி அனைவரையும் பாராட்டியுள்ளார்.இதனை நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த சினிமா நட்சத்திரங்கள்

விளம்பரம்

Embed video credits : skarmy

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment