The Indian Times

REMAKE படம் தான்….ஆனா?….நெஞ்சுக்கு நீதி Public Review

கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியவர் அருண் ராஜா காமராஜ்.பாடகர் மற்றும் காமெடி நடிகராக சினிமாவில் வலம் வந்த இவர் இயக்குனர் ஆகவேண்டும் என லட்சியத்துடன் இயக்குனர் நெல்சனிடம் துணை இயக்குனராக பணியாற்றினார்.பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தர்ஷனை வைத்து கனா என்ற படத்தினை அளித்தார்.இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.முதல் படத்திலேயே பலரையும் கவர்ந்தார் அருண்ராஜா காமராஜ்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இவர் தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் வைத்து நெஞ்சுக்கு நீதி என்ற படத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் ஹிந்தியில் வெளியாகிய ஆர்டிகள் 15என்ற படத்தின் ரீமேக் படம் ஆகும்.இதனை தமிழகத்திற்கு தகுந்த மாதிரி மாற்றியமைத்து எடுத்துள்ளனர்.இப்படத்தினை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார்.திப்பு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.போலீஸ் கதாபாத்திரத்தில் முதன் முதலாக உதயநிதி நடித்து அசத்தியுள்ளார்.எப்பொழுதும் ஜாலியாகவே படம் செய்து வந்த உதயநிதி மனிதன்,சைக்கோ போன்ற சீரியஸ் படங்களையும் கையிலெடுத்து வெற்றியும் பெற்றுள்ளார்.

Advertisement

அனைவரும் எதிர்பார்த்த நெஞ்சுக்கு நீதி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியது.காலை 4 மணிக்கே முதல் காட்சிகள் தொடங்கிவிட்டனர்.படத்தினை பார்த்து வெளியே வரும் ரசிகர்கள் படம் நல்லா இருக்கு,சூப்பரா எடுத்திருக்காங்க என பாசிட்டிவ் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் குடும்பத்துடன் பார்க்கும் படம் என கூறியுள்ளனர்.பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருந்த படம் தற்போது வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

Embed video credits : Chennai Bites

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in