The Indian Times

இன்னைக்குனு பாத்து ரொம்ப JAM ஆகுதே..DippamDappam பாடலுக்கு நடனமாட கஷ்டப்பட அனிருத்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் காத்துவாக்குலரெண்டு காதல்.இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.அனிருத் இசையமைத்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

கடந்த மாதம் வெளியாகிய இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது.இருப்பினும் நல்ல வசூல் படைத்துள்ளதாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்த மூன்று பாடல்களும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றாலே அனிருத்தை தான் தேடி செல்கின்றனர்.காரணம் அந்த அளவிற்கு ஹீரோக்களுக்கு மாஸ் ஆக பின்னணி இசை மற்றும் பாடல்களை கொடுத்து வருகிறார்.இவர் இசையில் தற்போது உருவாகும் பாடல் அனைத்துமே மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.அண்மையில் விக்ரம் படத்தில் இருந்து வெளியாகிய பத்தலை பத்தலை என்ற பாடல் தற்போது பட்டிதொட்டியெங்கும் ஒலித்து வருகிறது.

Advertisement

இதில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவிற்கும் வைக்கப்பட்டுள்ள டிப்பம் டப்பம் என்ற பாடல் வீடியோவில் அனிருத் நடனமாடியுள்ளார்.இந்த பாடலின் உருவாக்கம் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.இந்த நடனத்தின் பயிற்சியின் பொழுது நடிகர் அனிருத் நடனம் ஆட கஷ்டப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.நடன குழுவினுடன் மிக கஷ்டப்பட்டு நடனமாடுகிறார் அனிருத்.ஆரம்பத்தில் திணறும் இவர் இறுதியில் கற்றுக்கொண்டு நடனமாடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

https://youtu.be/lsOmb_aHnso

Embed video credits: Behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in