The Indian Times

வீட்டுக்குள்ளேயே ஜிம் வைத்துக்கொண்டு வெறித்தனமா Workout செய்த அருண் விஜய்…வைரலாகும் வீடியோ

பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய்.1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு நுழைந்தார்.இதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு ஏதுவாக இவருக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமாருக்கு வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி படத்தில் நடித்து அனைவரையும் நடிப்பில் மிரட்டி இருந்தார்.இந்த படத்தில் அருண் விஜய்க்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் என்ற அந்தஸ்தினை பிடித்தார்.அதனை தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு தொடர்ந்து நடித்து வருகிறார்.தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.

Advertisement

தற்போது இவரது அக்கா அனிதா தனது தம்பி அருண் விஜய் வீட்டுக்கு வந்து வீடியோ பதிவிட்டுள்ளார்.அதில் தனது தம்பி அருண் வீட்டின் இரண்டாவது மாடியில் சொந்தமாக ஜிம் வைத்துள்ளார்.அவர் தற்போது உடற்பயிற்சி செய்துவருகிறார் என கூறி அவர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருவதை வீடியோவை காண்பித்துள்ளார்.அவரது ஜிம்மையும் சுற்றி காட்டியுள்ளார்.வீடியோவில் அருண் விஜய் முரட்டுத்தனமாக உடற்பயிற்சி செய்து வருவதை காண முடிகிறது.

Embed video credits : galatta

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in