The Indian Times

வாடி வாசல் பாடலில் நடனத்தில் வெளுத்தெடுத்த சரவணா ஸ்டார் முதலாளி

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடிக்கும் திரைப்படம் தி லெஜெண்ட்.இதுவரை அவரது சரவணா ஸ்டார் விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்த இவர் தற்போது இப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்க்கும் இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ள்ளார்.பட்டுக்கோட்டைப் பிரபாகர் திரைக்கதை அமைத்து இருக்கிறார்.லெஜெண்ட் சரவணன் இப்படத்தினை தயாரித்துள்ளார்.பாடல் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் இப்படத்தின் மொசலு என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட இருப்பதாக படக்குழு நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் இன்று இப்படத்தின் இரண்டாவது பாடலான வாடிவாசல் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.இந்த வாடிவாசல் பாடலில் யாரும் எதிர்பாராத வண்ணம் லெஜெண்ட் சரவணன் நடனத்தில் மிரட்டியுள்ளார்.இப்பாடல் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

ஹரிஷ் ஜெயராஜ் இசையில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகும் பாடல்கள் என்பதால் ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர்.சினிமா ரசிகர்கள் படம் வெற்றிபெற லெஜெண்ட் சரவணனை வாழ்த்தி வருகின்றனர்.இப்படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.மேலும் இப்படத்தில் மறைந்த நடிகர் விவேக் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு பெருமளவு கிளம்பியுள்ளது.படம் வெளியாகும் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Embed video credits : think music india

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in