The Indian Times

குழந்தைகளுடன் விளையாட்டு !!மனைவிக்கு அன்பு முத்தம்!! விடுமுறையை கொண்டாடும் நடிகர் யாஷின் வைரல் புகைப்படங்கள்

கன்னட நடிகர் யாஷ் கேஜிஎப் படத்தின் மூலம் உலகம் முழுவதும் மிக பிரபலமடைந்தார்.இப்படத்தின் இரண்டாம் பாகம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியாகிய இந்த படம் வசூலில் மாபெரும் சாதனையை படைத்தது.இரண்டாம் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கான முதல்கட்ட வேலைகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

கேஜிஎப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் அடுத்த படங்களின் கதைகளை தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாக உள்ளார்.அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட் ஆகி இருக்கும் யாஷ் தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் விடுமுறை நாட்களை சந்தோசமாக கழித்து வருகிறார்.தனது மனைவிக்கு இவர் கொடுத்த காதல் முத்தினை அழியாத நினைவுகளான புகைப்படமாக்கி யாஷ் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இதுபோன்று எப்பொழுதும் நீங்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in