The Indian Times

சேட்டை புடிச்ச ஆள் சார்….AVATAR-ஆக மாறிய JEYAM RAVI

ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் ஆக மாறியுள்ளார் ஜெயம் ரவி .முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.மிருதன்,டிக் டிக் டிக் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து மக்களை வெகுவாக கவர்ந்தார்.இவர் நடிப்பில் வெளியாகிய தனி ஒருவன் படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக சினிமாவில் அமைந்தது.ஆதி பகவன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் ஜெயம் ரவி.அதிலும் குறிப்பாக பகவான் கதாபாத்திரத்தில் பிரித்து மேய்ந்திருப்பார்.ஹீரோ கதாபாத்திரம் மட்டுமில்லை வில்லன் கதாபாத்திரமும் கட்சிதமாக வரும் என பகவான் கதாபாத்திரத்தின் மூலம் தெரிவித்தார்.

Advertisement

தற்போது இவர் பொன்னியின் செல்வன் படத்தின் பிசியாக நடித்து வருகிறார்.இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் கிளம்பி இருக்கிறது.மேலும் அடுத்தடுத்து ஜெயம் ரவி தொடர்ச்சியாக கைவசம் படைகளை வைத்துள்ளார்.இவர் நடித்துள்ள அகிலன் படம் அடுத்ததாக இவருக்கு வெளியேற இருக்கும் புதிய படம் ஆகும்.இந்நிலையில் நடிகர் ஜெயராம் ரவி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இன்ஸ்டாகிராமில் பில்டர் உபயோகித்து தனது முகத்தினை அவதார் முகமாக மாற்றியுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் ஜெயம் ரவி அடுத்து என்ன ஹாலிவுட் படமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in