The Indian Times

கடுமையான TASK-கள்..திணறும் COOK-கள்…| COOK WITH COMALI FINALE

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளராக அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருத்திகா, வித்யூலேகா,ஆகிய நிலையில் வெளியேறிய போட்டியாளர்களுக்கு வைல்ட் கார்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் கிரேஸ் கருணாஸ் மற்றும் சந்தோஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதனால் இவர்களுக்குள் இறுதி போட்டியில் கடுமையான போட்டிகள் நடைபெற உள்ளது ,தற்போது கடந்த இறுதி போட்டிக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது.அடுத்தவாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இந்த போட்டிகள் ஒளிபரப்பாக உள்ளது.மக்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இருந்தாலும் நிகழ்ச்சி முடியப்போகிறதே என்ற கவலையும் உள்ளது

இந்நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்நிகழ்ச்சி 5 மணி நேரம் தொடர்ந்து ஒளிபரப்பு ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கடுமையாக புது புது டாஸ்க் கொடுத்து அவர்களை திணறடித்துள்ளனர் நடுவர்கள்.மேலும் அவர்களுடன் இணைந்து நகைச்சுவையும் செய்துகொண்டு கடுமையாகவும் உழைத்துள்ளனர் கோமாளிகள்.இந்த முறை யார் வெல்ல போவது என்ற ஆவல் அனைவரிடமும் உள்ளது ஏனென்றால் இறுதி போட்டியாளர்கள் எல்லாருமே நன்றாக சமைக்க கூடியவர்கள்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in