The Indian Times

COOK WITH COMALI ….TITLE WINNER இவரா…கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளராக அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருத்திகா, வித்யூலேகா, உள்ளனர் .இந்நிலையில் இந்த வாரம் வைல்ட் கார்டு போட்டிகள் நடத்தப்பட்டு இதுவரை வெளியேறிய போட்டியாளர்களில் இருந்து கிரேஸ் கருணாஸ்,சந்தோஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதி போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இறுதி போட்டிக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது.அடுத்தவாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இந்த போட்டிகள் ஒளிபரப்பாக உள்ளது.மக்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இருந்தாலும் நிகழ்ச்சி முடியப்போகிறதே என்ற கவலையும் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது

இந்நிலையில் இறுதி போட்டியில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ள நிலையில் தற்போது இதுகுறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி இறுதி போட்டியில் சிறப்பாக சமையல் செய்து ஸ்ருத்திகா டைட்டில் வின்னர் பட்டத்தினை தட்டி சென்றுள்ளார்.இதனால் இவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.மேலும் இதனை நிகழ்ச்சியில் காண்பதற்கும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.இதனை அறிந்த பலரும் ஸ்ருதிக்காவின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என அவரை பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in