The Indian Times

செம Modern-ஆக மாறிய Biggboss சாக்ஷி அகர்வால்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் சாக்ஷி அகர்வால்.இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் ஆகினார்.பின்னர் தொடர்ந்து தமிழ் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சிறப்பான விளையாட்டை காண்பித்து மக்களை தனது வசம் இழுத்தார்.

Advertisement

தற்போது இவர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் தான் இவருக்கு அடுத்து வெளியாக இருக்கும் படம்.மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெற்றதை தொடர்ந்து பல படவாய்ப்புகள் இவருக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது.இருப்பினும் துணை கதாபாத்திரமாக இருந்தாலும் அதன் கதாபாத்திரத்தினை ஆராய்ந்து தான் நடிப்பேன் என தீவிரமாக கதை கேட்டு நடித்து வருகிறாராம் நம்ம சாக்ஷி.

Advertisement

இவர் ஹாலிவுட்டிலும் தனது கால் தடத்தினை பதித்துள்ளார்.பெரிய பெரிய முன்னணி நடிகைகளுக்கு கிடைக்காத வாய்ப்பு சாக்ஷி அகர்வாலுக்கு கிடைத்துள்ளது.120 hours என்ற ஆங்கில படத்தில் நடிகையாக நடித்து ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார்.தற்போது இவர் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் நடிகை சாக்ஷி முற்றிலும் மாடர்ன் ஆக மாறியுள்ளார்,இதனை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் சாக்ஷி நீங்க முன்ன விட இப்போதான் அழகா இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://youtu.be/5_VrDmjRc8o

Embed video credits:galatta

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in