திடீரென நிச்சயதார்த்த புகைப்படத்தினை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்த Blacksheep விக்னேஷ்காந்த்

ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையை ஆஹா எப்எம்மில் தொடங்கியவர் விக்னேஷ் காந்த்.அதன்பின்னர் தனது கடின உழைப்பினால் Blacksheep என்ற யூடியூப் சேனலை தொடங்கி மக்களை மகிழ்விக்க ஆரம்பித்தார்.புதிய புதிய நிகழ்ச்சிகளை கொண்டு வந்து மக்களை திரும்பி பார்க்க செய்தார்,தற்பொழுது பல இளைஞர்கள் யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோ பதிவிட்டு வருகிறார்கள் என்றால் இவரும் அதற்கு ஒரு காரணமே .டிவியில் மட்டுமில்லாமல் யூடியூபிலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தியவர் இவர்.

திடீரென நிச்சயதார்த்த புகைப்படத்தினை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்த Blacksheep விக்னேஷ்காந்த் 1

விளம்பரம்

சென்னை 600028 என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய இவர்,ஹிப் ஹாப் தமிழா இயக்கத்தில் வெளிவந்த மீசையமுறுக்கு படத்தில் முழுநேர காமெடியனாக களம் இறங்கி கலக்கினார்.இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து தற்போது பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.இவரது யூடியூப் பக்கத்தின் bsvalue என்ற செயலியையும் பிரம்மாண்டமாக வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

திடீரென நிச்சயதார்த்த புகைப்படத்தினை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்த Blacksheep விக்னேஷ்காந்த் 2

விளம்பரம்

இவருக்கு தற்போது திருமணம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.தனது நிச்சயதார்த்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.மேலும் நிச்சயம் எளிமையாக நடத்தப்பட்டுள்ளது,கல்யாணத்திற்கு எல்லாரையும் அழைக்கின்றேன்.கல்யாண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.இவரின் இந்த பதிவில் வந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திடீரென நிச்சயதார்த்த புகைப்படத்தினை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்த Blacksheep விக்னேஷ்காந்த் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment