The Indian Times

Don Video Song Promo | Private Party | Sivakarthikeyan | Anirudh Ravichander

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் டான்.இப்படத்தினை சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தினை வெளியிடுகிறது.இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

தற்போது படம் மே 13 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ட்ரைலர் எப்பொழுது வெளியாகும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படத்திலிருந்து மூன்றாவது பாடலாக Privateparty எனும் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

இவர் நடிப்பில் வெளியாகிய டாக்டர் படம் மாபெரும் வரவேற்பை சிவகார்த்திகேயனுக்கு பெற்று தந்தது தொடர்ந்து பல படங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.தற்போது இப்படத்தில் இவர் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார் இதனால் எப்படி இவருக்கு அமையப்போகுதோ என ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in