இலங்கை பிரச்சனை குறித்து பேசி சிக்கலில் மாட்டிய நடிகை லாஸ்லியா : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா அங்குள்ள சக்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்.தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 3யில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி போட்டியாளராக களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் மட்டுமில்லாமல் தமிழக மக்கள் இருக்கும் இடம் அனைத்திலும் மிகவும் பிரபலமாக மாறினார்.

இலங்கை பிரச்சனை குறித்து பேசி சிக்கலில் மாட்டிய நடிகை லாஸ்லியா : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்ததை தொடர்ந்து படவாய்ப்புகள் தொடர்ச்சியாக லாஸ்லியாவிற்கு வர தொடங்கின.ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகினார் லாஸ்லியா.இப்படத்தில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இந்நிலையில் இவர் தற்போது கேஸ் ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குனர் சபரீஷ் இயக்கத்தில் கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார்.இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியது.

கட்டாயம் படிக்கவும்  தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவியின் அழகிய புகைப்படங்கள்

இலங்கை பிரச்சனை குறித்து பேசி சிக்கலில் மாட்டிய நடிகை லாஸ்லியா : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் 2

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ,இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்சனைகள்  குறித்து இவரிடம் கேள்வி கேட்கப்பட்டது,அதற்கு பதிலளித்த லாஸ்லியா  கூறியதாவது,இலங்கையில் இப்பொழுது இருக்கும் பொருளாதார பிரச்சனைக்குறித்து போஸ்ட் தான் போட்டு ஷேர் செய்து என்னால் வருத்தப்படத்தான் முடியுமே தவிர உதவிட முடியாது மற்றும் சாதாரண தினக்கூலிகளை நினைத்தால் கஷ்டமாக உள்ளது,விரைவில் இதிலிருந்து மீண்டு வருவோம் என நினைப்பதாக தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் PLAYBOY-ஆக அசத்தும் அசோக்செல்வனின் எமக்கு தொழில் ரொமென்ஸ் பட ட்ரைலர் இதோ

இலங்கை பிரச்சனை குறித்து பேசி சிக்கலில் மாட்டிய நடிகை லாஸ்லியா : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் 3

விளம்பரம்

இவரின் இந்த பேட்டிக்கு ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.உங்கள் மக்களுக்கு நீங்கள் சிறு உதவி கூட செய்திடமுடியாத நிலையிலா உள்ளீர்கள் ,உங்களிடம் யாரும் உதவி கேட்கவில்லை என நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.தற்போது வாய் கொடுத்து வம்பில் மாட்டியுள்ளார் லாஸ்லியா.இவரை நெட்டிசன்கள் தொடர்ந்து வசைபாடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  PT வாத்தியாராக HIPHOP ஆதி மிரட்டும் PT SIR படத்தின் ட்ரைலர் இதோ

 

விளம்பரம்

 

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment