The Indian Times

மேடையில் நடனத்தில் வெளுத்து வாங்கிய அஸ்வின்

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகிய கதை திரைக்கதை வசனம் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் அஸ்வின்.அதன்பின்னர் நெருங்கி வா முத்தமிடாதே,ஓகே கண்மணி போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும் தந்துவிட்டேன் என்னை ,லைவ் டெலிகாஸ்ட் போன்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

பல படங்களில்நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 2ல் போட்டியாளராக களம் இறங்கி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றார்.இதில் கிடைத்த வரவேற்பு இவரை அடுத்த கட்டம் நோக்கி கொண்டு சென்றது.இதுவரை சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் என்ன சொல்ல போகிறாய்,இப்படத்திற்கு பின்னர் மீண்டும் இரண்டு படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார் மேலும் மியூசிக் வீடியோக்களிலும் நடித்து வருகிறார் அஸ்வின்.அண்மையில் இவர் மேடை நிகழ்ச்சி ஒன்றி போட்ட ஆட்டம் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Embed video credits : behindwoods tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in