The Indian Times

அடேங்கப்பா…சிவகார்த்திகேயன் College-ல இவ்ளோ Arrear வச்சிருந்தாரா?

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியதா நடிகர் ஆக உள்ளார்.தொகுப்பாளராக இருந்து தற்போது சினிமாவில் விஜய் அஜித் அளவிற்கு உயரம் எட்டியுள்ளார் என்றால் அதற்கு இவர் கடின உழைப்பே காரணம் ஆகும்.இவர் படங்கள் கோடிகளில் வசூல் செய்வதால் படத்தை இயக்குவதற்கு இயக்குனர் போட்டிபோடுவதை விட அதனை தயாரிக்க தயாரிப்பாளர்கள் தான் அதிகமாக போட்டியிடுகின்றனர்.

Advertisement

வருகிற மே மாதம் 13 ஆம் தேதி அறிமுக இயக்குனர் சிபி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.இதில் இவர் கல்லூரி மாணவனாக நடித்து அசத்தியுள்ளார்.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இவர் நிஜ வாழ்க்கையில் ஒரு பொறியியல் பட்டதாரி என்பது எல்லாருக்கும் தெரியும்.தனது பொறியியல் படிப்பினை திருச்சியில் உள்ள ஜேஜே கல்லூரியில் தான் படித்தார்.

Advertisement

அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது,நான் கல்லூரி படிக்கும் பொழுது 17 அரியர் வச்சிருந்தேன்.அப்புறம் சரி படிப்போம் டிகிரிய வாங்கணும்னு நல்லா படிக்கிற பொன்னுங்கள்ட்ட போய் கேட்டு படிச்சி அரியர்ஸ் எல்லாம் பாஸ் ஆனேன் என கூறியுள்ளார்,இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

Embed video credits : indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in