The Indian Times

வெறித்தனமான ரசிகர்களுக்கு நேரில் இன்ப அதிர்ச்சி அளித்த கமல்…சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து ரசிகர்கள்…

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமாவிற்கெல்லாம் நாயகன் உலக நாயகன் கமல் ஹாசன்.இவர் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள விக்ரம் படத்திற்காகத்தான் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் தீவிரமாக காத்துகொண்டு இருக்கிறது.இந்த படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தினை கமல்ஹாசனின் சொந்த நிறுவனம் ஆன ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

படத்தின் ட்ரைலர் மற்றும் இசை கடந்த மே 15ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.படத்தில் முதல் முதலாக வெளியாகிய பத்தலை பத்தலை பாடல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்து பட்டிதொட்டியெங்கிலும் ஒலித்து வருகிறது.ஜூன் 3 ஆம் தேதி முதல் விக்ரம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.இயக்குனர் லோகேஷ் தொடர்ந்து பேட்டிகளில் பங்கேற்று படம் குறித்து பேசி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் உலகநாயகன் ரசிகர்களுக்காக படக்குழு சிறிய surprise ஒன்றினை அளித்துள்ளது.அதாவது உலகநாயகனின் வெறித்தனமான ரசிகர்களை அழைத்து அவர்களை கமல்ஹாசன் குறித்து பேச வைத்துள்ளனர்.அவர்கள் உலகநாயகன் மேல் இருக்கும் பாசம் மற்றும் மரியாதையும் தங்களை மறந்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது உலகநாயகன் அவர்கள் பின்னால் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.உலக நாயகனை முதல் முறையாக பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Embed video credits : sonymusic

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in