The Indian Times

நடிகை நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் டும் டும் டும்…..எப்போ தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன்.இவர் இயக்கத்தில் வெளியாகிய நானும் ரவுடிதான் படத்தில் கதாநாயகியாக நடித்தார் நயன்தாரா.இந்த படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.இவர்கள் இருவருக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர்கள் எங்கு சென்றாலும் இவர்கள் பதிவிடும் புகைப்படம் அன்றைய நாளில் இணையத்தளத்தில் பெரும் வைரலாவது வாடிக்கையான ஒன்று.

Advertisement

தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தினை இயக்கி இருந்தார்.இப்படத்தில் நயன்தாரா விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இப்படத்தின் நிகழ்ச்சிகளில் நயன்தாரா விக்னேஷ் சிவன் கலந்துகொண்ட புகைப்படங்கள் பெருமளவு வைரலாகியது.இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி,நல்ல பொண்ணு கிடைக்கிறது கஷ்டம் சீக்ரம் கல்யாணம் பண்ணிக்கோ விக்கி என விக்னேஷ் சிவனுக்கு அறிவுரை கூறினார்.

Advertisement

இந்நிலையில் நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் கல்யாணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி இவர்கள் மாதம் ஒருமுறை சென்று வரும் திருப்பதி கோவிலில் வைத்து இருவருக்கும் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை அவர்களே வெளியீடுவார்கள் என இவர்களது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in