The Indian Times

DON ட்ரைலர் வெளியீட்டு விழாவில் உதயநிதியை கூப்பிட்டு வச்சி செய்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டான்.இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.இதில் கதாநாயகி பிரியங்கா மோகன்,எஸ் ஜெ சூர்யா,சமுத்திரக்கனி என படத்தில் நடித்த பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

டான் படத்தினை சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமும்,லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தினை தமிழகத்தில் வெளியீடு செய்கிறார்.அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் வெளியீடு விழாவில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ட்ரைலர் வெளியீடப்பட்டது.இந்த ட்ரைலரில் இறுதியாக அரசியல் வேண்டாம் அரசியலுக்கு வந்தால் பொய் சொல்ல வேண்டியது வரும் என குறிப்பிட்டு இருப்பார்கள்.

Advertisement

இதனை கண்ட உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் சிவகார்த்திகேயன் சார் சும்மா படத்துக்காக வைத்தது என சிவகார்த்திகேயன் கூறுகிறார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த பலரும் இந்த வீடியோ உதயநிதிக்கு பொருந்தும் அவர் தான் அரசியல் வருவதற்கு முன்னால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறினார் ஆனால் தற்போது வரை அதை நிறைவேற்றவில்லை என மீம் வீடியோவாக கிரியேட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Embed video Credits : TPMEMES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in