The Indian Times

நடிகர் பார்த்திபனிடம் மைக்கால் அடிவாங்கிய ரோபோ ஷங்கர்

நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபன் நேற்றைய நிகழ்ச்சி ஒன்றில் நடந்துகொண்ட செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.பன்முக திறமை கொண்ட பார்த்திபன் அண்மையில் எழுதி இயக்கி நடித்த படம் ஒத்த செருப்பு.இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.மேலும் ஆசியா புக் ஆப் ரெகார்டஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ஸில் இடம் பெற்றுள்ளது.

Advertisement

தற்போது அதேபோல் மீண்டும் ஒரே ஷார்ட்டில் இரவின் நிழல் என்ற புதிய படத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து நேற்று படத்தின் முதல் பாடல் வெளியீடு விழா நடைபெற்றது.இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.நேற்றய நிகழ்ச்சியில் ஏஆர் ரஹ்மான் உடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் பொழுது மைக் சரியாக வேலை செய்யவில்லை என கூறி அதனை தூக்கி எறிந்தார்.

Advertisement

அந்த மைக் அங்கு நின்றுகொண்டிருந்த ரோபோ சங்கர் மீது பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் கலந்துள்ளதாகவும் அவர் அங்கு நின்றுகொண்டிருந்தபொழுது பார்த்திபன் வீசிய மைக் அவர் மேல் விழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.பார்த்திபன் இந்த நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்து அதே மேடையில் மன்னிப்பும் கோரியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 Comment

Yasin Jemi — 3/5/2022

poda potta paarthiba