The Indian Times

நான் உங்களை ஏமாத்தல…..வீடியோ வெளியிட்டு கெஞ்சிக்கேட்ட புகழ்

நாள்தோறும் சினிமா கனவுகளுடன் குறைந்தது 10 பேராவது சென்னைக்கு வருகை தருகின்றனர்.ஆனால் அவர்கள் அங்கு வெற்றிபெற்றார்களா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.காரணம் பாதி முயற்சியிலேயே திரும்புவது ஆகும்.பல இளைஞர்களில் ஒருவராக தான் பல கனவுகளுடன் சென்னை வந்தவர் புகழ்.ஆரம்பத்தில் சென்னையில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என வெறியுடன் போராடி வந்தார்.ஏவிஎம் ஸ்டூடியோ எதிரே உள்ள கார் வாஷிங் கடையில் பணிபுரிந்துகொண்டே வாய்ப்பு தேடினார்.அப்பொழுது தான் இவர் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் பலனாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அது இது எது நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனை சரியாக பயன்படுத்திவிட வேண்டும் என கூட்டத்தில் ஒருவனாய் உள்நுழைந்தார்.பின்னர் தனது எதார்த்த நடிப்பு மற்றும் பேச்சுக்களால் மக்களை கவர்ந்தார்.குறிப்பாக அவருக்கு மட்டுமே தனி பெண் குரல் உண்டு அதில் பேசி அனைவரது மனதினையும் கொள்ளைகொண்டார் புகழ்.தொடர்ந்து மனம் தளராமல் பெண் வேடம் அணிந்து மக்களை சிரிக்க வைத்தார் புகழ்.தன்னை தனியாக காட்ட வேண்டும் என எண்ணி தான் போட்டுள்ள லேடி கெட்டப்பிலேயே அங்கிருந்து அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்க வைத்தார்.தற்போது பிரபலமாகி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நடித்து வருகிறார் மேலும் கதாநாயகனாகவும் புதிய படத்தில் நடித்துள்ளார் புகழ்.

Advertisement

இந்நிலையில் புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.அந்த வீடியோவில் அவர் தனது பெயரை சொல்லி மோசடி நடப்பதாகவும்,நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக கூறி என் பெயரை சொல்லி பணம் வாங்குவதாகவும் கேள்வி பட்டேன்,நான் வெளிநாட்டில் இருக்கிறேன்,நான் நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தால் வீடியோ தருவேன்.யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.இது புகழின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in