The Indian Times

Vignesh sivan-னை Nayanthara-விடம் கோர்த்துவிட்ட DD..Great escape ஆகிய Vignesh sivan

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் அனைவரும் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகையும் வெளி உலகையும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அடிக்கடி திருப்பதி கோவிலுக்கு நயன்தாராவுடன் சென்று சுவாமி தரிசனம் செய்து புகைப்படத்தினை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.அன்று இவர்கள் வெளியிடும் புகைப்படம் தான் இணையத்தில் பெரிதும் பேசப்படும் விஷயம் ஆகும்.இவர்களின் கல்யாணம் எப்பொழுது என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில் அண்மையில் இவர்கள் திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.ஆனால் அதிகாரபூர்வ் அறிவிப்பு இதுவரை இவர்களிடம் இருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது விருது வழங்கும் நிகழ்ச்சியில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இருவரும் இணைந்து கலந்துகொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகை விருது நயன்தராவிற்கு கொடுக்கப்பட்டது.நிகழ்ச்சியின் போது,தொகுத்து வழங்கிய டிடி ,உங்களது முக்கியமான நாளில் அதாவது கல்யாண நாளில் நயன்தாரா என்ன கலர் ஆடை உடுத்தியிருந்தால் நல்ல இருக்கும்னு நீங்க எதிர்பார்க்கீங்க என விக்னேஷ் சிவனிடம் கேட்க,அதற்கு சுதாரித்துக்கொண்ட விக்னேஷ் சிவன் ,அவங்களுக்கு என்ன பிடிக்குதோ அத உடுக்கட்டும்,நான் ஒன்னு சொல்லி அவங்க ஒன்னு யோசிச்சு வைக்கவா,அவங்களுக்கு என்ன கலர் ஆடை உடுத்தினாலும் நல்லாத்தான் இருக்கும்னு நழுவியுள்ளார்.இந்த இருவரின் அழகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

https://youtu.be/f4OeCAuK8Pg?t=564

Embed video credits : Galatta tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in