The Indian Times

நான் அடிக்கிற அடி மரண அடியாதான் இருக்கும்…வெறித்தனமாக வெளியாகிய THE LEGEND TRAILER

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடிக்கும் திரைப்படம் தி லெஜெண்ட்.இதுவரை அவரது சரவணா ஸ்டார் விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்த இவர் தற்போது இப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்க்கும் இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ள்ளார்.பட்டுக்கோட்டைப் பிரபாகர் திரைக்கதை அமைத்து இருக்கிறார்.லெஜெண்ட் சரவணன் இப்படத்தினை தயாரித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் இப்படத்தின் மொசலு என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.அதேபோல் இப்படத்தின் இரண்டாவது பாடலான வாடிவாசல் பாடலை வெளியிட்டது.இந்த வாடிவாசல் பாடலில் யாரும் எதிர்பாராத வண்ணம் லெஜெண்ட் சரவணன் நடனத்தில் மிரட்டியுள்ளார்.முதல் பாடலை போல தற்போது இப்பாடலும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இன்று சென்னை நேரு அரங்கில் மிக பிரம்மாண்டமாக இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் 10 முன்னணி கதாநாயகிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.லெஜெண்ட் சரவணனுக்கு இப்படம் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.இதில் விஞ்ஞானியாக நடித்துள்ளார் என்பது ட்ரைலரை காணும் பொழுதே தெரிகிறது.காதல்,சண்டை என ட்ரைலரில் அசத்தியுள்ளார் சரவணன்.இந்த ட்ரைலர் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அனைவரும் நடிகர் லெஜெண்ட் சரவணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.விரைவில் பல முன்னணி நடிகர்களுக்கு இவர் போட்டியாக அமைவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Embed video credits : think music india

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

2 Comments

சு.சேது — 30/5/2022

அருமையான அற்புதமான டிரைலர்

G — 31/5/2022

Super trailer sir