ஆரம்பிக்கலாங்களா….விக்ரம் படத்தின் முதல் பாடல் தேதி குறித்து அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம்.இப்படத்தில் விஜய் சேதுபதி,பகத் பாசில் மற்றும் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தின் சில காட்சிகள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.இப்படம் வருகிற ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டில் கடலுக்கடியில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி கொண்டாட்டம்

ஆரம்பிக்கலாங்களா....விக்ரம் படத்தின் முதல் பாடல் தேதி குறித்து அறிவிப்பை வெளியிட்ட படக்குழு 1

விளம்பரம்

நீண்ட நாட்கள் கழித்து உலகநாயகன் நடித்துள்ள திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.அதுவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சம்பவத்தில் உலகநாயகன் எப்படி வெளுத்து வாங்க போகிறாரோ என்பதை நினைக்கும் பொழுது ஆவல் அதிகரித்துள்ளது.இப்படத்தினை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது அனிருத் இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

ஆரம்பிக்கலாங்களா....விக்ரம் படத்தின் முதல் பாடல் தேதி குறித்து அறிவிப்பை வெளியிட்ட படக்குழு 2

விளம்பரம்

தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியீடு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.அதன்படி படத்தின் முதல் பாடல் வருகிற 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.இதனால் உலகநாயகன் ரசிகர்கள் கொண்டாடத்தில் உள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment