The Indian Times

கல்யாணம் முடியலைன்னு காசிக்கு கிளம்பிய நம்ம PREMGI

பிரபல இயக்குனர் கங்கை அமரனின் மகன்கள் தான் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி.இதில் பிரேம்ஜிக்கு இன்று வரை திருமணம் ஆகவில்லை.திருமணத்தினை எதிர்பார்த்து தான் அவரும் காத்திருக்கிறார்.இவர் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் அசத்தி வருகிறார்.காமெடி,ஹீரோ என பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

தமிழில் புன்னகை பூவே என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நடிகராக அறிமுகமாகினார்.அதன்பின்னரும் பல படங்கள் நடித்தும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.சிம்பு நடித்த மன்மதன் படத்தில் நயன்தாராவிற்கு நண்பராக வந்து அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.அதனை தொடர்ந்து சென்னை 28,சத்தம் போடாதே என பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

Advertisement

2005 ஆம் ஆண்டு வெளியாகிய ஞாபகம் வருதே என்ற படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகினார்.அண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகிய மன்மதலீலை படத்திற்கும் இவர்தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இவரும்,இவரது அண்ணனும் காசிக்கு சென்றுள்ளனர்.அதனை வீடியோவாக பதிவிட்டு பிரேம்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் என்ன பிரேம்ஜி திருமணம் ஆகவில்லை என காசிக்கே சென்றுவிட்டிர்களா என நகைச்சுவையாக கேள்வி கேட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in