The Indian Times

மகனை தொடர்ந்து நடிக்க வரும் நடிகர் ஜெயராமின் மகள்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜெயராம்.இவர் தமிழில் 1992 ஆம் ஆண்டு வெளியாகிய கோகுலம் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.தற்போது அணைத்து முன்னனி நடிகர்ளுடனும் படம் நடித்துவிட்டார்.தற்போது இவரது மகன் காளிதாஸ் ஜெயராம் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் மகனை தொடர்ந்து மகளையும் ஜெயராம் நடிக்க அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இவர் மனைவி பார்வதியும் ஏற்கனவே தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது 4வது நபராக குடும்பத்தில் இருந்து நடிக்க வர இருக்கிறார் மாளவிகா ஜெயராம்.இவர் மலையாள இயக்குனர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து அதிகார்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in