The Indian Times

வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்த சார்பட்டா மாரியம்மா

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் சார்பட்டா பரம்பரை.இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் படக்குழு படத்தினை நேரிடையாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட்டது.இப்படத்தில் கதாநாயகியாக துஷ்ரா விஜயன் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் பசுபதி ,துஷ்ரா விஜயன், கலையரசன், ஜான் கோக்கன்,முத்துக்குமார்,சந்தோஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் தான் துஷ்ரா விஜயன்,இவர் நடிப்பின் மீது கொண்ட காதலால் படிப்பினை பாதியிலேயே விட்டுவிட்டு வாய்ப்பு தேட தொடங்கினார்.இவர் முதல் முறையாக போதை புத்தி மாறி என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.பின்னர் மீண்டும் முயற்சி செய்ய தொடங்கினார் அப்பொழுது தான் பா ரஞ்சித் இயக்கம் சார்பட்டா படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு இதில் நடிக்க தொடங்கினார். சார்பட்டா பரம்பரையில் தனது மிரட்டலான நடிப்பினை காண்பித்து மக்களை வெகுவாக கவர்ந்தார்.மாடர்ன் ஆன பொண்ணு சென்னை பெண்ணாக நடித்து அசத்தியுள்ளார்.

Advertisement

தற்போது இவர் விடுமுறைக்காக துபாய் சென்றுள்ள நிலையில் அங்கு அவர் வானத்தில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்துள்ளார்.இந்த சாதனையை அவர் வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவிற்கு இவரது ரசிகர்கள் லைக்குகள் மற்றும் சூப்பர் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.சார்பட்டாவில் இவருக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து மேலும் சில படங்களில் இவர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in