The Indian Times

மனித மூளை விசித்திரமானது..மீண்டும் Spider சுடலை ஆக மாறிய எஸ்.ஜே.சூர்யாவின் மிரட்டும் பொம்மை Trailer

தமிழ் சினிமாவை முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர் ஆக கலக்கி வருபவர் எஸ் ஜே சூர்யா,கதாநாயகனாகவும் சரி கதையின் வில்லன் ஆகவும் சரி எந்த பாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாக செய்து முடிப்பவர் இவர்.1999 ஆம் ஆண்டு அஜித்தை வைத்து முதல் முறையாக வாலி படத்தினை இயக்கி மீண்டும் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.வாலி படம் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.எஸ் ஜே சூர்யாவின் நீண்ட கால உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றே இதனை சொல்லலாம்.தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் எஸ் ஜே சூர்யா.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த வருடமே தளபதி விஜயை வைத்து குஷி படத்தினை இயக்கினார்.இப்படமும் தாறுமாறாக தமிழ் சினிமாவில் ஹிட் அடித்து முன்னணி இயக்குனராக உருமாறினார்.அஜித் மற்றும் விஜய் படத்தினை இயக்கி அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ஒரே இயக்குனர் இவர்.தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் எஸ் ஜே சூர்யா படங்கள் இயக்கியுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இயக்குனர் எஸ் ஜே சூர்யாவிற்கு தற்போது ஓய்வை கொடுத்து சினிமாவில் நடிப்பதில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார் நடிகர் எஸ் ஜே சூர்யா. இவர்.1988 ஆம் ஆண்டு வெளியாகிய நெத்தியடி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார்.தற்போது சினிமாவையே தனது நடிப்பு திறமையால் கலக்கு கலக்கி வருகிறார்.இறைவி தொடங்கி டான் வரை எஸ் ஜே சூர்யா நடிப்பு காண்பவர்களை நெகிழ செய்துள்ளது.தற்போது கடமையை செய்,பொம்மை என அடுத்தடுத்து கைவசம் படங்களை வைத்துள்ளார் எஸ் ஜே சூர்யா.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது இவர் மக்களை மகிழ்வடைய செய்யும் கதைகளை கேட்டு நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் எஸ்ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொம்மை.இப்படத்தினை மொழி,மற்றும் அபியும் நானும் படத்தினை இயக்கிய ராதா மோகன் இப்படத்தினை இயக்கியுள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.தற்போது இப்படத்தின் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது நீண்ட நாட்களுக்கு பிறகு எஸ் ஜே சூர்யா தனது மாறுபட்ட நடிப்பினை இப்படத்தில் வெளியிட்டுள்ளார்.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்து ட்ரைலரை ஷேர் செய்து வருகின்றனர்.

Embed video credits : think music india

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in