The Indian Times

நீ ஹார்பர் உள்ள வரும் போதுதான் கலாட்டா கலவரம் நடக்கு…மிரட்டி எடுத்த ஜெயம் ரவியின் அகிலன் TEASER

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்,ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து இன்று சினிமாவில் உச்ச இடத்தினை பிடித்துள்ளார்.முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.இவருக்கென தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது, ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி,அரவிந்த் சாமி நடித்த திரைப்படம் தனி ஒருவன்.இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது.இப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக இருந்தது.இப்படத்தின் வெற்றியினை தற்போது வரை ஜெயம் ரவி தக்கவைத்து கொண்டு தான் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.மிருதன்,டிக் டிக் டிக் போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க மக்களை வெகுவாக கவர்ந்தார்.இயக்குனர் அமீர் இயக்கத்தில் இவர் நடித்த ஆதிபகவன் திரைப்படம் இவரின் நடிப்பினை உலகிற்கு கொண்டு வந்தது.ஆதி பகவன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் ஜெயம் ரவி.அதிலும் குறிப்பாக பகவான் கதாபாத்திரத்தில் அடித்து துவைத்து இருப்பார்.தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு இவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது,இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது

Advertisement

நடிகர் ஜெயம் ரவியை வைத்து பூலோகம் எனும் படத்தினை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் என்பவர் ஜெயம் ரவியை வைத்து மீண்டும் அகிலன் என்ற படத்தினை இயக்கி வருகிறார்.இதில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.தூத்துக்குடி பகுதியை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.தற்போது இப்படத்தின் டீசரை படகுழு வெளியிட்டுள்ளது.டீசரில் ஜெயம் ரவி பட்டையை கிளப்பியுள்ளர்,தெறித்தெறிக்கும் வசனங்களை பேசி மிரட்டியுள்ளார்.இந்த டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in