பிரபல பாடகர் ஜஸ்டின் பீபருக்கு நேர்ந்த அவலம்…கண்ணீர் விட்டு கதறி அழும் ரசிகர்கள்

விளம்பரம்
விளம்பரம்

கனேடிய பாப் பாடல் சூப்பர் ஸ்டார் ஜஸ்டின் பைபர்.இவர் பல பாப் பாடல்களை பாடியுள்ளார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.யூடியூபில் பாடல்களை பதிவிட்டு பிரபலமாகியவர் இவர்.மேலும் பாடகர் மட்டும் இல்லாமல் தற்போது நடிகராகவும் உள்ளார்.இவர் 2009 ஆம் ஆண்டில் வெளியிட்ட வன் டைம் என்ற பாடல் கனடாவில் மாபெரும் ஹிட் அடித்தது.முதல் பத்து பாடல்களில் இடம்பெற்றுள்ளது மேலும் சர்வதேச பாடல்களில் முதல் 30 இடத்திற்குள் இடம் பிடித்து அசத்தியது.இதன் மூலம் மக்களிடம் மிக பிரபலமாகினார் ஜஸ்டின்.தொடர்ந்து ஆல்பம் பாடல்களை வெளியிட்டு அசத்தி பெரும் வரவேற்பினை பெற்றார் ஜஸ்டின்.சிறுவயதிலேயே முன்னணி பாடகர் ஆன அந்தஸ்தினையும் பெற்றார் ஜஸ்டின் பாடல்கள் பாடி பல விருதுகளையும் பெற்றுள்ளார்.வெளிநாட்டில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  குழந்தைகளுடன் குத்தாட்டம் போட்ட வெண்ணிலா கபடி குழு கதாநாயகி

பிரபல பாடகர் ஜஸ்டின் பீபருக்கு நேர்ந்த அவலம்...கண்ணீர் விட்டு கதறி அழும் ரசிகர்கள் 1

விளம்பரம்

தற்போது இவர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய தகவலை அளித்துள்ளார்.இதுகுறித்து வீடியோவாக பேசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜஸ்டின்.அதன்படி அவர் கூறியதாவது,இவர் ராம்சே ஹண்ட் சின்ரோம் என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.இந்த நோய் இவரின் முகத்தினை தாக்கியுள்ளதாம்.இதனால் அவரது முகத்தின் ஒரு பகுதி முற்றிலும் செயலிழந்து வருகிறதாம்,முகத்தில் உள்ள ஒரு கண் இமைக்காது எனவும் மற்றும் வாய் இந்த பக்கத்தில் சிரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.நான் இவ்வாறு இருக்க விரும்பவில்லை ஆனால் என் உடல் என்னை மெதுவாக செயல்பட கூறுகிறது என தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  KGF யாஷை அசால்ட்டாக சாப்பிட்ட சிம்பு! வெந்து தணிந்தது காடு TRAILER Idho

பிரபல பாடகர் ஜஸ்டின் பீபருக்கு நேர்ந்த அவலம்...கண்ணீர் விட்டு கதறி அழும் ரசிகர்கள் 2

விளம்பரம்

விரைவில் நான் சரியாகிவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன் ஆனால் இதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது என்பது தெரியவில்லை அதுவரை ஓய்வு எடுக்கப்போவதாக ஜஸ்டின் பைபர் அறிவித்துள்ளார்.இதனால் அவர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருந்த அனைத்து தேதிகளை ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்த செய்தியை கேட்ட இவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.நீங்கள் மீண்டு வர வேண்டும் என கூறி கருத்துக்களை பதிவிட்டு ரசிகர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.28 வயதிலேயே இந்த நோயால் இவர் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.பல ரசிகர்களும் இவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.இவரின் இந்த பதிவு பெரும் கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.விரைவில் இதிலிருந்து இவர் மீண்டு வருவார் என நம்புவோம்

கட்டாயம் படிக்கவும்  யாருங்க இவரு குடத்துலயே ஆழ்வார் பேட்டை ஆண்டவா பாடலை பாடி அசத்துறாரு

பிரபல பாடகர் ஜஸ்டின் பீபருக்கு நேர்ந்த அவலம்...கண்ணீர் விட்டு கதறி அழும் ரசிகர்கள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment