The Indian Times

பூஜா ஹெக்டேவை மிரட்டிய விமான ஊழியர் ..அவரே பயந்து வெளியிட்ட பதிவு

தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் பூஜா.அதன்பின் தெலுங்கு சினிமாவில் முழுவதும் நடிக்க தொடங்கி விட்டார்.பின்னர் தனது கடின முயற்சியினால் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் மேலும் இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே.இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் வராததாலும் மேலும் தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக வைகுண்டபுரம் படத்தில் நடித்து மிக பிரபலமாகினார்.அதில் இடம் பெற்ற புட்ட பொம்மா என்ற பாடல் மூலம்,தெலுங்கில் மட்டும் இல்லாமல்,தமிழ்,மலையாளம்,கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமாகினார் பூஜா.இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜயின் பீஸ்ட் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.தனது வித்தியாசமான நடிப்பினாலும்,கவர்ச்சிகரமான தோற்றத்தினாலும் ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.

Advertisement

மும்பையில் இருந்து தனியார் விமானத்தில் ஐதராபாத் சென்று கொண்டிருந்த நிலையில்,அந்த விமானத்தில் உள்ள ஒரு தனியார் ஊழியர் விபுல் நாகாஷே என்பவர் முரட்டு தனமாக நடிகையிடம் நடந்துகொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது,எங்களிடம் விமான ஊழியர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்,மேலும் திமிர்பிடித்து எங்களிடம் நடந்துகொண்டது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது இதுவரை பொதுவாக நான் இதுபோன்ற விஷயங்களை பற்றி பேசியதில்லை,இது உண்மையில் மிகவும் பயங்கரமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in