OTT-யிலும் விருந்தளிக்க காத்திருக்கும் விக்ரம்..புதியதாக சேர்க்கப்பட இருக்கும் காட்சிகள்…என்ன தெரியுமா அது?

சிறுவயது முதல் இன்று வரை சினிமாவில் நிலைத்திருக்கும் என்றும் இளமையான ஒருவர் என்றால் அது கமல்ஹாசன் தான்.அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என பாட ஆரம்பித்த கமல்ஹாசன் இன்று பத்தலை பத்தலை பாடல் வரைக்கும் பயணித்த தூரம் மிக அதிகம்.இதில் வெற்றி தோல்வி என பலவற்றினை மாறி மாறி கண்டுள்ளார்.இருப்பினும் வெற்றியை மட்டும் தக்க வைத்துக்கொண்டு தோல்வியை துரத்திவிடுவது கமல்ஹாசனால் மட்டுமே முடியும் அவரால் மட்டுமே முடியக்கூடிய ஒன்று ஆகும்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்த காலத்திலேயே சமூகம் சார்ந்த படங்களில் நடித்து மக்களுக்கு உணர்ச்சியை மூட்டியுள்ளார்.இத்தகைய கமல்ஹாசன் சினிமாவிற்கு வரம் என்று தான் சொல்லவேண்டும்,அதுவும் தமிழ் சினிமாவிற்கு கிடைத்தது அதிலும் சிறப்பு

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட BIGGBOSS ஜோவிகா வனிதா

OTT-யிலும் விருந்தளிக்க காத்திருக்கும் விக்ரம்..புதியதாக சேர்க்கப்பட இருக்கும் காட்சிகள்...என்ன தெரியுமா அது? 1

விளம்பரம்

விஸ்வரூபம் இரண்டாம் பாகத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் ஈடுபாடு காட்டவில்லை,அரசியலிலும் களம் இறங்கியதால் 4 ஆண்டுகளுக்கு மேல் அவர் படங்கள் நடிக்கவில்லை,எப்பொழுது அவர் திரும்பி வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் மீண்டும் பழைய விக்ரம் ஆக வந்து அசத்தியுள்ளார் கமல்.இவர் நடித்து 1987ல் வெளிவந்த விக்ரம் படம் மாபெரும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து தற்போது இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் மீண்டும் இப்பட்ட்டத்தின் தொடர்ச்சியாக விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது.ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடிய தமிழ் சினிமா நட்சத்திரங்கள்

OTT-யிலும் விருந்தளிக்க காத்திருக்கும் விக்ரம்..புதியதாக சேர்க்கப்பட இருக்கும் காட்சிகள்...என்ன தெரியுமா அது? 2

விளம்பரம்

இப்படத்திற்காக பல லட்சம் செலவில் கமல்ஹாசனின் இளமை தோற்றத்தினை சில நிமிடம் படமாக்கியுள்ளனர்.அது முடிய இன்னும் அதிக நாட்கள் ஆகும் நிலையில் அதனை மட்டும் நீக்கிவிட்டு படத்தினை வெளியிட்டுள்ளனர்.அவரது இந்த கெட்டப்பிற்கே திரையரங்கு அரண்டுபோன நிலையில் மீண்டும் அவர் இளமையாக நடித்திருந்தால் கேட்கவா வேண்டும்.இந்நிலையில் விக்ரம் படம் சில நாட்களில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது,அதன்படி இந்த ஓடிடி வெளியீட்டில் இந்த காட்சியினை இணைப்பதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் ஓடிடியிலும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க இருக்கிறது விக்ரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment