The Indian Times

அய்யோ அம்மா என் மண்டை:REELS செய்துகொண்டிருக்கும் பொழுது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏற்பட்ட பலத்த அடி

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் நீதானா அவன் என்ற படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடிகையாக அறிமுகமாகினார்.இதனை தொடர்ந்து அவர் 8 படங்கள் தமிழில் நடித்துள்ளார்.இதில் இவருக்கு எந்த படத்திலும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இந்நிலையில் ரம்மி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றார்.

Advertisement

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன்னை திரும்பி பார்க்க செய்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.தனுஷுக்கு ஜோடியாக வட சென்னை படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படவைத்தார்.தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துள்ளார்.

Advertisement

இவர் தற்போது சிறிய குழந்தையுடன் ரீல்ஸ் வீடியோ செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ காண்போரை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.காரணம் குழந்தையுடன் ரீல்ஸ் வீடியோ செய்துகொண்டிருக்கும் பொழுது குழந்தை ஐஸ்வர்யா ராஜேஷ் மண்டையில் முட்டியது.இதனால் வலிதாங்க முடியாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் துடித்துள்ளார்.தற்போது இதனை வீடியோவாக பதிவிட்டு இப்படி ஒரு அழகான ட்ரெண்ட் வீடியோ தவறாக போய்விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் சிரித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in