The Indian Times

ஏன் அமீர் என்ன இப்படி பாடா படுத்துறே….வலியில் கதறும் பிக் பாஸ் பாவனி

பிக் பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக பங்குபெற்றவர்கள் அமீர் மற்றும் பாவனி.இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பழகிய விதம் அனைவருக்குள்ளும் இவர்கள் காதலிக்கின்றார்களோ என்ற எண்ணத்தினை உருவாகியது.இதுகுறித்து பாவனியிடம் கேட்டதற்கு அவர் இல்லை என்று மறுத்துவிட்டார்.ஆனால் அமீர் பாவனியை காதலிப்பதாகத்தான் கூறி வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இதற்கு ஒரு முடிவே இல்லாமல் இந்த காதல் கதை சென்று வருகிறது.

Advertisement

தற்போது இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 என்ற நடன நிகழ்ச்சியில் நடனமாடி வருகின்றனர்.இவர்கள் இருவரும் அறிமுக நிகழ்ச்சியிலேயே நடனத்தில் பட்டையை கிளப்பி ரம்யாகிருஷ்ணனிடம் நல்ல கருத்துக்களை பெற்றனர்.தற்போது இந்த வார நிகழ்ச்சியிலும் வெளுத்து வாங்கி இருப்பதை வெளியாகிய ப்ரோமோவில் இருந்து காணலாம்.இங்கும் அமீர் பாவனியை காதலிப்பதாக சுற்றி சுற்றி வருகிறார்.

Advertisement

அமீர் ஏற்கனவே நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளதால் பாவனிக்கு நடனத்தினை அமீர் சொல்லிக்கொடுத்து வருகிறார்.நடனத்திற்கு முன்பு பாவனியை அமீர் தயார் செய்யும் வீடியோவை பாவனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மேலும் இவரை மாற்றுவதற்கான வழிமுறைகள் என்ன எனவும் பதிவிட்டுள்ளார்.அந்த அளவிற்கு அமீர் பாவனியை படாத பாடு படுத்தி வருகிறார்.இதனால் பாவனி வலியில் கதறியுள்ளார்.இதனை பார்த்த இவரது ரசிகர்கள் பாவனி பாவும் என பார்த்து சொல்லிக்கொடுங்க அமீர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in