The Indian Times

BULLET பாடலுக்கு மரண குத்து போடும் பிக் பாஸ் சுஜா

பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு மக்களுக்கு அறிமுகமாகியவர் சுஜா வருணே.இவர் முதன் முதலில் பிளஸ் 2 என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.அதன்பின் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.இதுவரை இவருக்கு தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரம் மட்டும் தான் கிடைத்து வந்தது.இவருக்கான சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக அறிமுகமாகினார்.இதில் கலந்துகொண்டு தனது சிறப்பான விளையாட்டை மக்களிடம் காட்டி நல்ல வரவேற்பை பெற்றார்.இவருக்கு திருமணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம் போன்ற சினிமாக்களிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் துணை கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கவர்ச்சி பாடலுக்கும் சினிமாவில் நடனமாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது இவர் தனது கணவர் சிவாஜி தேவ் உடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் நடனமாடி வருகிறார்.இந்நிலையில் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் புல்லட் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் கூடி வீடியோவிற்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றன.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in