The Indian Times

அடடே சமந்தாவுக்கு என்ன மனசு..சக நடிகைக்கு சமந்தா கொடுத்த Surprise…கண்கலங்கிய நடிகை

விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகம் ஆகியவர் நடிகை சமந்தா.இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து சமந்தா தெலுங்கில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து பானா காத்தாடி படம் மூலம் தமிழில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகினார்.

Advertisement

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார்.தமிழில் மட்டும் இல்லாமல் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் கூட பிரபலமாகியுள்ளார் நடிகை சமந்தா.இவர் தற்போது நடிகர் விஜய் தேவர்கொண்டா உடன் குஷி எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை சமந்தா பிறந்தநாள் அன்று நடிகர் விஜய் தேவர்கொண்டா கேக் வெட்டி சமந்தாவின் பிறந்தநாளை கொண்டாடினார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.

Advertisement

அதனை தொடர்ந்து தற்போது சக நடிகரின் பிறந்தநாளை படப்பிடிப்பில் நடிகை சமந்தா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.இதில் விஜய் தேவர்கொண்டாவும் கலந்துகொண்டுள்ளார்.சக நடிகை கேக் வெட்டி சமந்தாவிற்கு மகிழ்ச்சியுடன் ஊட்டி விடுகிறார்.இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது இதனை பார்த்த சமந்தா ரசிகர்கள் உண்மையிலேயே சமந்தாவிற்கு நல்ல மனசுப்பா,பெரிய நடிகை என்றும் பாராமல் சக நடிகைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுகிறாரே என அவரை பாராட்டி வருகின்றனர்.

Embed video credits : galatta

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in