போடு செம்ம மாஸ் தான்…ஆக்ஷன் இயக்குனருடன் அதிரடியாய் களம் இறங்கும் ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் இயக்குனர் ராஜ இயக்கத்தில் ஜெயம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகியவர் ஜெயம் ரவி .முதல் படமே தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் பெயரினை பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல வாழ்க்கையில் ஒன்றிவிட்டது.இவர் உடன் பிறந்த சகோதரர் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார் ஜெயம் ரவி.ஆரம்பத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இன்று வரை அதைத்தான் செய்து வருகிறார்.போடு செம்ம மாஸ் தான்...ஆக்ஷன் இயக்குனருடன் அதிரடியாய் களம் இறங்கும் ஜெயம் ரவி 1

இவர் நடிப்பில் வெளியாகிய மிருதன்,டிக் டிக் டிக் போன்ற படங்கள் இவருக்கு கூடுதல் வரவேற்பினை மக்களிடம் அளித்தது.வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து மக்களை வெகுவாக கவர்ந்தார்.இவர் நடிப்பில் வெளியாகிய தனி ஒருவன் படம் இவருக்கு சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக சினிமாவில் அமைந்தது.தற்போது இவர் பொன்னியின் செல்வன் படத்தின் பிசியாக நடித்து வருகிறார்.இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் கிளம்பி இருக்கிறது.மேலும் அடுத்தடுத்து ஜெயம் ரவி தொடர்ச்சியாக கைவசம் படைகளை வைத்துள்ளார்.இவர் நடித்துள்ள அகிலன் படம் அடுத்ததாக இவருக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

போடு செம்ம மாஸ் தான்...ஆக்ஷன் இயக்குனருடன் அதிரடியாய் களம் இறங்கும் ஜெயம் ரவி 2

இந்நிலையில் தற்போது கோலிவுட்டில் இருந்து மாஸ் ஆன தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.ஆக்ஷன் என்றாலே நினைவுக்கு வருவது ஹரி தான் தற்போது இந்த இயக்குனர் ஹரி உடன் இணைந்து ஜெயம் ரவி படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த கூட்டணி உறுதியானால் நிச்சயம் இப்படம் ஜெயம் ரவி படங்களில் இருந்து மாறுபட்டு காணப்படும்.காரணம் ஜெயம் ரவி மெதுவான திரைக்கதையில் தான் தற்போது வரை படம் நடித்து வருகிறார்,ஆனால் இயக்குனர் ஹரி படங்கள் திரைக்கதை புயல் வேகத்தில் நகரும் என்பதால் இப்படம் இவருக்கு நிச்சயம் புது அனுபவத்தினை கொடுக்கும் அவருக்கு மட்டும் இல்லாமல் அவரது ரசிகர்களுக்கும் அப்படியே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போதுவரை இந்த கூட்டணி உறுதி செய்யப்படாத நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment