The Indian Times

கணவருக்காக புதிய பைக் வாங்கிய மணிமேகலை …கணவன் மனைவினா இவங்கள மாறிதான் இருக்கனும்

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.சன் மியூசிக் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாகியவர் இவர்.தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.இவர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக தனது வாழ்க்கையினை வாழ்ந்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

சன் மியூசிக் தொலைக்காட்சியில் இருந்து விஜய் தொலைக்காட்சிக்கு தொகுப்பாளராக சென்று மிக பிரபலமாகினார்.இவருக்கான சரியான வாய்ப்பினை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பொழுதுதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நகைச்சுவையில் அதகளம் செய்து காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்து வருகிறார்.இவருக்கு தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

அண்மையில் இவர் கணவனுக்கு முதல் முதலாக வாங்கி கொடுத்த பைக் திருடு போய்விட்டது.இதனால் பெரும் சோகத்தில் இருவரும் இருந்தனர்.அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில் தற்போது காதல் கணவருக்காக புதிய பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.இன்று அந்த பைக்கினை வாங்கிய வீடியோவை மகிழ்ச்சியாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவில் இவரது ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த பைக் விலை குறைந்தது 3 லட்சத்திற்கு மேல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in