பத்தவச்சிட்டியே பரட்டை…BIGG BOSS சீசனில் களம் இறங்கும் இசையமைப்பாளர் இமான் முன்னாள் மனைவி…

இசையமைப்பாளர் இமான் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர்.தனது வசீகரமான இசையால் மக்கள் மனதினை கொள்ளை கொண்டவர் இமான்.தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர்களில் ஒருவராக உருமாறியுள்ளார் இதற்கு காரணம் இவரது கடின உழைப்பே ஆகும்.இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு அழகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

பத்தவச்சிட்டியே பரட்டை...BIGG BOSS சீசனில் களம் இறங்கும் இசையமைப்பாளர் இமான் முன்னாள் மனைவி... 1

விளம்பரம்

இந்நிலையில் இமான் மற்றும் அவர்களது மனைவி மோனிகா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.குழந்தைகள் இருவரும் தாய் மோனிகாவிடம் உள்ள நிலையில் இசையமைப்பாளர் இமான் மற்றொரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.இந்த விஷயம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.இதில் சிலர் இமானுக்கு ஆதரவு தெரிவித்தாலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த பிரச்சனைகளினால் மோனிகா ட்வீட்டரில் சில விஷயங்களை பகிர்ந்து அது பெரும் பேசுபொருளாக மாறி,பலரின் கவனம் மோனிகா பக்கம் திரும்பியது.இந்நிலையில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் முன்னாள் மனைவி மோனிகா கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பத்தவச்சிட்டியே பரட்டை...BIGG BOSS சீசனில் களம் இறங்கும் இசையமைப்பாளர் இமான் முன்னாள் மனைவி... 2

விளம்பரம்

தமிழில் வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்துள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி மேலும் கூடுதலாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் நடைபெற்றது.தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் விரைவில் தொடங்கபட இருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பல பிரபலங்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அந்த பட்டியலில் இமான் முன்னாள் மனைவி மோனிகா பெயர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் இதுகுறித்து இதுவரை எந்த தகவலையும் மோனிகா தரப்பினரிடம் இருந்து பெறவில்லை,இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 90 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Embed video credits: galatta tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment