The Indian Times

BIGG BOSS ஜூலி மருத்துவமனையில் அனுமதி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடி அனைவரது கவனத்தினையும் ஈர்த்தவர் ஜூலி.இதில் பிரபலமாகிய ஜூலிக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது. விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக களம் இறங்கி மக்களிடம் கூடுதல் வரவேற்பினை பெற்றார்.அதில் கிடைத்த வரவேற்பை வைத்து சில படங்களில் நடித்துள்ளார் மேலும் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

அதன்பின்னர் சின்னத்திரை பக்கம் மீண்டும் வராத ஜூலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோஷூட் எடுத்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.தற்போது இவர் மீண்டும் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிக சிறப்பாக ஆட்டத்தினை வெளிப்படுத்தி சக போட்டியாளர்களுக்கு கடும் போட்டியாளராக பிக் பாஸ் ஜூலி அமைந்தார் .

Advertisement

தற்போது ஜூலி மருத்துவமனையில் அனுமதி ஆகி இருப்பது போல் புகைப்படத்தினை பதிவு செய்துள்ளார்.இதனால் பதறிய இவரது ரசிகர்கள் ஜூலி உங்களுக்கு என்னாச்சு என கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்த ஜூலி கண்ணில் லேசர் சிகிச்சை செய்ய மருத்துவமனைக்கு வந்துள்ளேன் நான் இப்போது நலமாக உள்ளேன் என நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in