The Indian Times

வயிற்றில் குழந்தையுடன் போட்டோஷூட் நடத்திய பிரபல நடிகரின் மனைவி

இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நகுல்.இவர் நடிகை தேவயானியின் தம்பி ஆவார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.5 பேரில் ஒருவராக வந்து அசத்தியிருப்பார்.பாய்ஸ் படத்தில் உடல் பருமனாக காணப்பட்ட நகுல் பின்னர் உடல் எடையை குறைத்து காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக மீண்டும் கால்தடத்தினை பதித்தார்.

Advertisement

இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை மீண்டும் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கினார்.இதில் சில படங்கள் நல்ல வரவேற்ப்பையும் சில படங்கள் தோல்வியையும் சந்தித்தன.இருப்பினும் மனம் தளராத நகுல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.அண்மையில் வெளியாகிய சில படங்களில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு எந்த படங்களிலும் கிடைக்கவில்லை.

Advertisement

இவருக்கும் இவரது மனைவி ஸ்ருபீக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது.இதனுடன் விளையாடி அடிக்கடி நடிகர் நகுல் வீடியோ பதிவிடுவார்.தற்போது நகுல் மனைவி மீண்டும் கர்ப்பமாக உள்ள நிலையில் இவரது மனைவி ஸ்ருபீ வயிற்றில் பிள்ளையுடன் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.இதனை வீடியோவாக பதிவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in