The Indian Times

வெளியாகியது விருமன் படத்திலிருந்து கஞ்சா பூவு கண்ணால பாடல் Promo

நடிகர் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் களம் இறங்கியவர்.இப்படத்தில் இவருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.அறிமுகமாகிய முதல் படத்திலேயே கிடைத்த பெரிய வரவேற்பு கார்த்தியை அடுத்தகட்டம் நோக்கி நகரவைத்தது.முதல் படத்தில் கிராமத்து ஆளாக வந்த கார்த்தி அடுத்த படமான பையா படத்தில் மார்டன் ஆன சிட்டி பையனாக வந்து அசத்தி அனைவரையும் கவர்ந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய கொம்பன் படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக கார்த்தி முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் கதாநாயகியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார்.இவர்களுடன் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.நடிகர் சூர்யா இப்படத்தினை தயாரித்துள்ளார்.

Advertisement

இப்படத்தின் முதல் பாடலான கஞ்சா பூவு கண்ணால என்ற பாடலின் ப்ரோமோவை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளதை இப்பட பாடல் ப்ரோமோவை பார்க்கும் பொழுதே தெரிகிறது.இந்த ப்ரோமோவிற்கு கார்த்தி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Embed video credits : sony music 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in